இசைவாணியை ரவுண்டு கட்டும் போட்டியாளர்கள்: கமலிடம் புகாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு சில போட்டியாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் நேற்று ஸ்ருதி மற்றும் பாவனி ஆகியோர்களை வளைத்து வளைத்து அனைத்து போட்டியாளர்களும் குற்றம் கூறினார்கள் என்பதையும் நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் இன்று இசைவாணி குறி வைக்கப்படுவது போல் தெரிகிறது. இசைவாணியை தாமரை மற்றும் மதுமிதா குற்றம் சாட்ட ’என்ன இப்படி பேசுகிறீர்கள்’ என கலக்கத்துடன் இசைவாணி பதில் கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது

மேலும் இசைவாணி, இமான் அண்ணாச்சியை குறைகூறும் காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமான் அண்ணாச்சி குறித்து கமல் சாரிடம் புகார் சொல்லப் போகிறேன் என்று இசைவாணி கூறுவதிலிருந்து இந்த வாரம் சனி ஞாயிறு கிழமைகளில் இசைவாணி கமல்ஹாசனிடம் ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment