எனக்கு தனியா விளையாட தெரியும்: அபிஷேக் மூக்கை உடைத்த இசைவாணி

இசைவாணியால் தனியாக விளையாட முடியாது என அபிஷேக் கூறியபோது என்னால் தனியாக விளையாட முடியும் என அபிஷேக்கின் மூக்கை உடைத்த இசைவாணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் தன்னை ஒரு ஹீரோ போல நினைத்துக் கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் கோமாளி ஆக்கி வருகிறார் என்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம்.

ஆனால் முதலில் அபிஷேக்கிடம் ஏமாந்த போட்டியாளர்கள் தற்போது சுதாரித்துக்கொண்டு அபிஷேக்கை கலாய்க்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இசைவாணியால் தனியாக விளையாட முடியாது என்றும் அவள் என்னுடைய டீமில் இருந்தால் தான் விளையாட முடியும் என்றும் அபிஷேக் கூற அதற்கு இசைவாணி என்னால் தனியாக முடிய விளையாட முடியும் என பதிலடி கொடுத்த புரமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசைவாணியை அடுத்து சுருதியும் அபிஷேக்கை கலாய்த்தார் என்பது மட்டுமின்றி நீ வெளியே போயிட்டா பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அழுவார்கள் என சிபியும் தனது பங்குக்கு கலாய்த்ததால் அபிஷேக்குக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாட்டத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment