யட்சிணி வழிபாடு நல்லதா

608a676782c3b1de80e84990b53c3eb8

யட்சிணி தேவதை வழிபாடு என்று ஒன்று இருக்கிறது . பல யட்சிணி தேவதைகள் இதை பழகியவர் காதில் சொல்லிக்கொண்டே இருக்கும். உதாரணமாக யட்சிணி வசியம் தெரிந்த அருள்வாக்கு சொல்பவர் ஒருவரிடத்தில் சென்றால் நாம் கேட்காமலே நம் பிரச்சினையை புட்டு புட்டு வைப்பார் இவருக்கு எப்படி இது தெரிகிறதென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும் அப்படி ஒரு விசயம்தான் யட்சிணி தேவதை வழிபாடு.

ஆனால் யட்சிணி மந்திரம் சொல்வதற்கே நிறைய விதிமுறைகள் உள்ளது  சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் யட்சிணி உபாசனைக்கே சொல்லப்பட்டுள்ளது.யட்சிணிகளில் நிறைய வகை உண்டு. சில மந்திரவாதிகள் யட்சிணி வசியம் சொல்லித்தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். சரியாக தெரியாமல் அதில் இறங்க கூடாது யட்சிணி வசியம் தெரிந்து கொண்டு அதை அரை குறையாகவும் கட்டுப்பாடுகள் இல்லாமலும் செய்தால் மிகுந்த ஆபத்து ஏற்படும் மன நலன் கூட பாதிக்கப்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.