கடந்த ஆண்டு முதல் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் முறையை பின்பற்றுகிறது. குறிப்பாக பெரும்பாலான ஐடி கம்பெனிகள் தற்போது வரை ஊழியர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் முறையை பின்பற்றுகிறது.
வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஊக்குவிப்பதால் நிறுவனங்களுக்கு பல வகையில் நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி நிறுவனங்களுக்கு வாடகை, மின்கட்டணம், உணவு, வாகனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது.
செயல்பாட்டு செலவுகள் குறைவதால் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. ஊழியர்களின் wifi உள்ளிட்ட இணைய வசதி மாதத் தொகையை மட்டுமே கொடுத்தால் போதும் என்பதால் நிறுவனங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கிறது.
பணியாளர்களின் வேலை நேரம் மிகுதி என்பதால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. காலை, மாலை, இரவு என எந்த நேரமும் ஊழியர்களின் சேவையை நிறுவனங்கள் பெறுகிறது.
பயணநேரம் சேமிக்கப்படுவதால் ஊழியர்களின் ஒட்டுமொத்த வேலை திறன் மேம்படுகிறது. இவை ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேலை நேர நெகிழ்வு தன்மையால் ஊழியர்கள் குடும்ப கடமைகளிலும், வேலையையும் சமமாக கவனம் செலுத்த முடிகிறது.
ஊழியர்கள் அதிக விடுப்புகள் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் உற்பத்தி திறன் பெருகும். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தடையின்றி பணிகள் மேற்கொள்வது சாத்தியமாக அமைந்துள்ளது.