Connect with us

அஜித் பைக் டூர் போக வினோத் தான் காரணமா? கதையில் மீண்டும் சொதப்பல்!

FVtGiepXsAEdpUL

பொழுதுபோக்கு

அஜித் பைக் டூர் போக வினோத் தான் காரணமா? கதையில் மீண்டும் சொதப்பல்!

அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் AK 61 . இந்த படத்திற்கு முன் வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருவதாக கூறப்படுகிறது.

அதற்காக ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் AK61 திரைப்படத்தில் வினோத் கையாண்டுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

thala ajith bike photos 1

வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை போல இப்படத்தின் திரைக்கதையையும் விறுவிறுப்பாக அமைக்கும் பணியில் வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில் அஜித் மீண்டும் பைக் டூர் ஆரமித்துவிட்டார்.அவர் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவனமான மெக்லாரன் ஷோரூமுக்கு அஜித் சென்று அங்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் உடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலானது.

FWEvgEhaUAgEAie 1 1

ஆனால் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநாடு சுற்ற காரணம்,அஜித் 61 படத்தில் அடுத்த கெட்அப் பிற்காக அஜித் அவர்கள் தயாராவதாக தகவல் வந்தது. மேலும் சிலர் AK61 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்திற்கு பிடிக்கவில்லை என்றும், கதையை மாற்றும்படி இயக்குனர் வினோத்திடம் கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது .

சிம்பு – ஹன்சிகா கூட்டணியில் மஹா படத்தின் அப்டேட்! ரிலீஸ் தேதி தெரியுமா?

அதனால் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றும்வரை படப்பிடிப்பை நிறுத்தும்படி அஜித் சொன்னதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனால் இது அனைத்தும் வதந்தி என்றும், யாரும் நம்ப வேண்டாம் என கருத்துக்கள் வந்துள்ளது.

படப்பிடிப்பு தொடங்கும் வரை இந்த மாதிரியான வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top