Entertainment
தளபதிக்கு ஜோடியா இந்த வனிதா? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது வாரம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டாவது வார முடிவில் முதலாவதாக உள்ளே நுழைந்து, மக்களின் வாக்குகள் அடிப்படையில் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார், கமலை சந்தித்த அவர் வனிதாவின் அடக்கு முறைகள் பற்றியும், அவருக்கு பயப்படும் மற்ற போட்டியாளர்களான ஷெரின், மோகன் வைத்யா, சாக்ஷி பற்றியும் குறிப்பிட்டார்.

சிலர் அவருக்கு கீழே அடங்கி சென்று விடுவதாகவும், சிலர் அவரது பேச்சுக்களைக் கண்டும் காணாமலும் உள்ளனர் என்று தெரிவித்தார்.
வனிதாவின் மீது போட்டி ஆரம்பித்த 2 வது நாளிலிருந்தே மக்கள் அதிருப்தி கொண்டனர். இவர் சம்பந்தப்பட்ட பதிவுகள் வலைதளங்களில் பரவிய வண்ணமே உள்ளது. அவரும் வீட்டிற்குள் ஏதாவது செய்து தினமும் ரசிகர்களுக்கு டாப்பிக் கொடுத்து விடுகிறார்.
மீம்ஸ்கள் இவராலேயே வாழ்கிறது போலும், அதில் நேற்று வெளியான ஒரு தகவல் ரசிக்களை அதிர்ச்சி அடையச் செய்தது, குறிப்பாக விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இருந்தாலும் விடமாட்டோம் என்ற போக்கில் கலாய்த்துத் தள்ளுகின்றனர்.
