அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை….!! ஓபிஎஸ் கருத்து தனிப்பட்டது;

கடந்த சில நாட்களாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்தினை கூறி கொண்டு வருகிறார். இதனால் அதிமுக கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்க படுவார் என்று அதிமுக சுற்றுவட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இதனை மறுத்துள்ளார். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

அதன்படி அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சசிகலா பற்றிய  ஓ. பன்னீர்செல்வம்  கருத்து தனிப்பட்டது;  தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப் பிரச்சினையில் தான் வேறுபாடு உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால் அதிமுகவில் சசிகலா இணைக்கப் பட வாய்ப்பே இல்லை என்று எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment