
தமிழகம்
எம்மாடியோ..! டுவிட்டர் நிறுவனத்தின் வருமானம் இத்தனை கோடியா ?
சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் முதலில் மூலப்படிமம் ஓடியோ பணியாளர்களின் அகச் சேவையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 2006 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் வருமானம் சுமார் 92 கோடி அதிகரித்துள்ளது. நடப்பாண்டிற்கான கால அளவில் டுவிட்டர் நிறுவனம் 513 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாக ஈட்டியுள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ஆகும். இதனிடையே கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் டுவிட்டர் நிறுவனத்தின் வருமானம் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 92 ஆயிரம் கோடியாகும். டுவிட்டர் பயனாளிகளும் கடந்த ஆண்டை விட 16% விழுக்காடு அதிகரித்துள்ளனர்.
மேலும், டுவிட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கிய எலான் மஸ்க் தற்போது நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கியுள்ளார். இருப்பினும் டுவிட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என பலத் தரப்பட்ட மக்களும் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
