விஜய்யின் அடுத்த பட நாயகி த்ரிஷாவா?

4eef3c38a1b11509363fdaead2a70bb1

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது பார்த்து வருகிறோம் 

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தில் ராஜூ பிரமாண்டமாக தயாரிக்கும் உள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் விஜய்யுடன் திரிஷா நடித்துள்ளார் என்பதும் அந்த படங்களில் சில சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரிஷா பிரபலமானவர் என்பதால் அவர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதால் இன்னொரு நாயகி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.