மாஸ் அப்டேட்!! வாரிசு படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதானா?

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக தளபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

vijay 2 look

விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும், இந்த படம் 2023 பொங்கல் அன்று வெளியாக இருப்பதால் படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், தற்போது விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

vijay 3 look

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment