ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருக்கிறவர்கள் செய்கிற வேலையா இது?

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இந்த வாரம் ஆரம்பம் முதலே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் திருச்சி பெரியசூரியூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 2 பேர் ஆள்மாறாட்டம் செய்ததால் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதன்படி மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

காலை பிடித்ததில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருந்த வீரர்கள் சீருடையை மாற்றி விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தில் இருந்த முடுவற்பட்டி ராமச்சந்திரன், மூன்றாவது இடத்தில் இருந்த சின்னப்பட்டி தமிழரசன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

சக்கரவர்த்தி என்பவரின் சீருடை அணிந்து ராமச்சந்திரன் விளையாடியதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்தனர். முடுவற்பட்டியை சேர்ந்த கார்த்தியின் சீருடையை அணிந்து விளையாடியுள்ளார்.

எட்டுக்காளைகளை பிடித்த ராமச்சந்திரன் மற்றும் 5 காளைகளை பிடித்த தமிழரசன் ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். முறைகேடாக சீருடை அணிந்து விளையாடிய வீரர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment