அஜித் வினோத் கூட்டணியில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

கலவையான விமர்சனங்களை பெற்று அஜித் ரசிகர்களை வருத்தத்தில் இருந்தலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது ஆறுதலாக இருந்தது. தொடர்ந்து அஜீத் மற்றும் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.
வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித். படத்தின் கதைக்களம் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அஜித் இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைதுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதெல்லாம் வெறும் வதந்தி தான் என ஒரே கதாபாத்திரத்தில் தான் அஜித் என அறிந்த அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது மற்ற படங்களில் நடிப்பது இல்லை. ஆனால் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கும் அஜித் AK 61, AK 62 படத்தில் நடித்த விக்னேஷ் சிவன் இயக்கத்திலும், தொடர்ந்து AK 63 சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கஉள்ளார்.
வினோத் இணையத்தில் வெளியாகும் படங்களின் தலைப்புகள் V என்ற எழுத்தில் தான் தொடங்கும். அதே போல இந்த படத்திற்கும் வீரா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளிவந்துள்ளது.
இதுபற்றி அதிகாரம் பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.