Connect with us

விஜய் 68 படத்தின் கதை இதுவா ?? அரைத்த மாவை அரைக்கும் அட்லீ !!..

vija atle

பொழுதுபோக்கு

விஜய் 68 படத்தின் கதை இதுவா ?? அரைத்த மாவை அரைக்கும் அட்லீ !!..

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

atle 1 1

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் 67வது படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குவார் என உறுதியாகியுள்ளது.

at 2

தற்போழுது இயக்குனர் , பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்திலும் ஷாரூக்கிற்கு ஜோடியாக நயன்தாராவையே நடிக்க ஒப்பந்தம் செய்தார் அட்லி. ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் கதையும் இணையத்தில் வெளியானது. இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் ஒருவர் சட்டத்தை காப்பாற்றும்உளவுத்துறை அதிகாரி, இன்னொருவர் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் செய்யக் கூடியவர்.

இந்த படத்தை முடித்த பிறகு தான் விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குகிறார்.இந்த படத்தின் கதை என்ன என்று தகவல் வந்துள்ளது.விஜய்,அட்லீ இயக்கத்தில் ‘இறுதியாகிய வந்த படம் ‘பிகில்’ .இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருப்பார்,அதில் அப்பா விஜயின் பெயர் ராயப்பன்.மகன் விஜய் தான் இதில் ஹீரோ .

AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ ??..அஜித் போட்ட கண்டிஷன் என்ன ஆச்சி !!..

atlee la

இது எல்லாம் ஒரு புறம் இருக்க விஜய்யின் 68வது படத்தில் பிகிலின் அப்பா விஜய் ராயப்பனின் இளமை காலத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.இந்நிலையில் ராயப்பனை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என அமேசான் ப்ரைம் ட்விட்டரில் கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு ’செஞ்சிட்டா போச்சு’ என ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top