பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தியதற்கு இது தான் காரணமா? விளக்கமளித்தார் மோடி;

சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசால் மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி பெண்களின் திருமண வயது 18 கிடையாது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது. இதற்கு ஒவ்வொரு மாநில அரசும் நல்லதொரு வரவேற்பு அளித்தது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி திருமண வயதை உயர்த்தியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காணொளி மூலமாக குறு, சிறு. நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள தொழில் மையம் மற்றும் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தபோது பேசினார்.

எங்களைப் பொறுத்தவரை மகன்களும் மகள்களும் சமம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதன் மூலம் இந்திய தேசத்தின் மகள்கள் தங்களின் கேரியரை அவர்களே அமைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

அவர்கள் சுய சார்பாகவும் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் தங்கள் கனவுகளை எந்தவித தடைகளும், பயங்களும் இல்லாமல் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றும் கூறினார். அவர்களுக்காக முத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற அரசு திட்டங்கள் உதவுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment