Connect with us

அடக்கடவுளே..! இ-ஸ்கூட்டர் குபு குபுவென எரிய இதுதான் காரணமா ?

e

செய்திகள்

அடக்கடவுளே..! இ-ஸ்கூட்டர் குபு குபுவென எரிய இதுதான் காரணமா ?

வெளிநாடுகளில் தயாராகி இருக்கும் இ-ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவது ஏன் என்பது குறித்த டிஆர்டிஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகன விற்பனையில் இ-ஸ்கூட்டர்களின் பங்கு 2% இருந்து 80% மாக அதிகரிக்க வேண்டுமென்பது ஒன்றிய அரசின் நோக்கம். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட இ- ஸ்கூட்டர்கள் பலவும் ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து உயிர்களையும் காவுவாங்கியது.

இதனால் ஒன்றிய அரசின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு பெரிய இடைவெளியாக இது அமைந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அதன்படி  டிஆர்டிஓ நடத்திய ஆய்வில் இ-ஸ்கூட்டகளில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் இ-ஸ்கூட்டர்கள் சரிவர பரிசோதனை செய்யாமல் அவசர நிலையில் விற்பனை சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டதின் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், செலவினத்தை குறைக்க இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேண்டுமென்றே தரமற்ற உதிரிபாகங்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top