மழைநீர் தேங்கியதற்கு இதுதான் காரணமா? அதிர்ச்சியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மழை ஓய்ந்து விட்டதால் முக்கிய சாலைகள்,சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேங்கிய மழைநீர்

இந்த நிலையில் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெளியேறாமல் தேங்கியதற்கு காரணம் பிளாஸ்டிக் குப்பை என்பது தெரியவந்துள்ளது.

மழைநீர் தேங்கி இருந்த பல்வேறு இடங்களில் இருந்து பல நூறு டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி உள்ளது சென்னை மாநகராட்சி. சென்னை மேற்கு மாம்பலத்தில் இருந்து மட்டுமே 180 டன் பிளாஸ்டிக் குப்பைகள், திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் குப்பைகள்

பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதை அடுத்து மேற்கு மாம்பலத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற தொடங்கிவிட்டது. சென்னை அசோக்நகர் உள்ளிட்ட இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்ட உடன் மழைநீர் வடிந்து வெளியேற தொடங்கிவிட்டது.

இன்று மட்டுமே மழைநீர் தேக்கம் தொடர்பான 400 புகார்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஏரிகளில் வீடு கட்டியது மட்டுமல்லாமல் அதிக அளவு பிளாஸ்டிக் பயன்படுத்தியதும் மழைநீர் தேங்கியதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment