தல தோனி, தளபதி விஜய் சந்திப்பின் காரணம் இதுவா?

f68efb4345a72ffb13f9285141b88858-1

தல தோனி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இன்று திடீரென சந்தித்துக் கொண்ட சம்பவம் திரையுலகிலும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் தளத்திற்குச் சென்ற தல தோனி, விஜய்யை சந்தித்தார் என்றும் இருவரும் சில நிமிடங்கள் தனியாக கேரவனில் பேசிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமிர்த்த சந்திப்பா அல்லது முக்கிய சந்திப்பா என்று தெரியாத நிலையில் தற்போது இது குறித்து ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு விளம்பரப் படம் எடுக்க இருப்பதாகவும் அந்த விளம்பர படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதற்காகவே தல தோனி விஜய்யை நேரில் சந்தித்தார் என்று கூறப்படுகிறது 

35db1d8d4346226786ed0d1c5e5f11e2-1

இதற்கு விஜய் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் இருந்த நிலையில் தற்போது அந்த விளம்பர படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.