சிம்பு-தனுஷ் சேர்ந்ததற்கு இதுதான் காரணமா? இதை யாருமே யோசிக்கலயே..!

நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் தற்போது சேர்ந்து விட்டதாக காணப்படுகிறது. அதன்படி எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என்பதுபோல சிம்பு- தனுஷ் என்ற போட்டி நீண்ட காலமாக இருந்தது.

ஏனென்றால் சிம்பு ஒரு கமர்சியல் படம் நடித்தால் அதனை போல் தனுஷ் ஒரு கமர்சியல் படம் நடிப்பார். தனுஷ் ஒரு காதல் படம் நடித்தால் அதேபோல் சிம்பு ஒரு காதல் படம் நடிப்பார். அதேவேளையில்  நடிகர் தனுஷ் நடிக்கும் கதாநாயகியோடு சிம்புவும் நடிப்பார்.

இப்படி ஒரு காலகட்டத்தில் போட்டி நடிகர்களாக வளர்ந்து வந்த சிம்பு, தனுஷ் தற்போது இணைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை சிம்புதான் வெளியிடப் போவதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி நடிகர்களாக இருந்த சிம்பு தனுஷ் தற்போது நட்பு நடிகர்களாக மாறி விட்டனர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment