51 வயதில் செய்யும் வேலையா இது? மாதவனை திட்டிய மனைவி… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ஒரு சமயத்தில் கோலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் தான் மாதவன். இவரது சிரிப்பிற்கே இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இவரை அனைவரும் செல்லமாக மேடி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு பிரபலமான மாதவன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, இறுதிச்சுற்று போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. தற்போது மாதவன் ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நம்பி நாரயணன், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகளை மாதவன் அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளாராம். மேலும், மறைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கான விஞ்ஞானியின் கதையாக இப்படம் இருக்கும் எனவும் மாதவன் கூறியுள்ளார்.

மாதவன் படங்களில் நடிப்பதை தவிர சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி அவரது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மாதவன் சமீபத்தில் சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிரமில் பதிவிட்டுள்ளார்.

அவர் தான் சாக்லேட் பாய் ஆச்சே அதனால் இந்த புகைப்படம் மில்லியன் லைக்குகளை தாறுமாறாக வாரிக்குவித்துள்ளது. இதனால் மாதவன் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்த புகைப்படத்தை பதிவு செய்ததற்காக மாதவனின் மனைவி அவரை திட்டியுள்ளாராம்.

அதாவது, “51 வயதாகும் நீங்கள், சட்டை இல்லாத புகைப்படத்தை பகிர வேண்டாம். வயதுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள்” என மாதவனின் மனைவி கண்டிப்புடன் அறிவுறுத்தினாராம். இந்த தகவலை மாதவனே சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment