Connect with us

இந்தக் கேள்வி ரேஷ்மாவுக்கா? கமல் ஹாசனுக்கா? குழப்பத்தில் மக்கள்

Entertainment

இந்தக் கேள்வி ரேஷ்மாவுக்கா? கமல் ஹாசனுக்கா? குழப்பத்தில் மக்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன், தன்னுடைய அரசியல் ஆட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் தொடங்கினார். பிரசார கூட்டங்களில் அவர் பேசுவதை காட்டிலும் பிக்பாஸ் செட்டில் கமல் பேசும் அரசியல் வசனங்கள் சிறப்பானதாக இருக்கும். 

நடப்பு அரசியல் களத்தை மறைமுகமாக சாடியும், சில நேரங்களில் நேரடியாக சாடியும் அவர் பேசுவது வழக்கம்.

6f3831e34653aec1eb3ff6666ec4d0c1

அந்தவகையில் இந்த சீசனில் புதுமையாக பிக்பாஸ் போட்டியாளர்களிடம் நேயர்கள் கேள்வி கேட்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 

இதற்காக நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் நபர், ஞாயிறுதோறும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் வரை வெற்றி பெறும் நேயர்கள் போட்டியாளர்களிடம் மட்டுமே கேள்வி கேட்டு வந்தனர். 

ஆனால் இந்தவார நிகழ்ச்சிக்காக வெற்றிப் பெற்ற நேயர் நேரடியாக ரேஷ்மாவிடமே கேள்வி எழுப்புகிறார். அதில், கவுண்டமணி மற்றும் செந்தில் போக எப்போதும் சேர்ந்திருப்பீர்களா? அல்லது வடிவேல் போல தனியாக இருப்பீர்களா? என்று கேட்டுள்ளார். 

ஆனால் இந்தக் கேள்வியே புரியாமல், ரேஷ்மா அவர் பங்குக்கு ஏதோ பதில் கூறிவிட்டார். ஆனால் தற்போது அனைவரும் எழுப்பியுள்ள கேள்வி இது ரேஷ்மாவிற்காக கேட்கப்பட்டதா இல்லை கமல் ஹாசனுக்காகவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதாவது அரசியலில் தனித்து செயல்படுவீர்களா? அல்லது வேறு ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்பது தான் நேயரின் கேள்விக்கான உட்பொருள் என்று வலைதளங்களில் பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top