
Entertainment
என்ன சொல்றீங்க..! குஷ்புவின் முதல் போட்டோ ஷூட் புகைப்படம் இதுதானா..?
தமிழ் சினிமாவில் 90 களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், கார்த்தி, சரத்குமார் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடிபோட்டவர். இவர் தற்போது அரசியல் மற்றும் சினிமாவில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்த இவர் மீண்டும் இளமை திரும்புதே என்று பேசும் அளவிற்கு மாறியுள்ளார். இவரை பார்க்கும் ரசிகர்கள் இது நம்ம குஷ்பூவா என திகைத்து நிற்கின்றனர்.
இதனிடையே சோசியம் மீடியாவில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மாஸ்காட்டி வருகிறது. அண்மையில் கண்ணாடி போட்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இந்த சூழலில் 13 வயதில் நடிகை குஷ்பூ எடுத்த முதல் போட்டோ ஷூட் புகைப்படத்தை சமூகவலைதளத்தி பதிவிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
#NewProfilePic at 13.. my very first photo shoot ever ❤️ pic.twitter.com/2pjVuNtgC5
— KhushbuSundar (@khushsundar) May 28, 2022
