சென்னையில் நிலநடுக்கமா?… அலுவலகத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மக்கள் – நடந்தது என்ன?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே அடுத்ததாக இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும், சென்னைக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்சு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நில அதிர்வு ஏற்பட்டது அங்கியிருந்த அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அண்ணாசாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அருகே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக டிரில் போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனால் தான் அலுவலகத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், உண்மையில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.