
பொழுதுபோக்கு
‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் பெயர் இதுதானா? கியூட்டா இருக்கே!!
அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் தனுஷ் நடித்த ‘தி க்ரே மேன்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான எதிர்பார்ப்பு உருவாகியது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைப்பெற்றதையடுத்து தனுஷ் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த ‘தி க்ரே மேன்’ போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் பெயர் அவிக் சான் என புது போஸ்ட் மூலமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. .
