அண்ணாமலையிடம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாசர் ஆகியோர் பாஜகவிற்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கமலாயத்தின் கதவுகள் திறந்திருக்கும் என பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 எடுத்து பெருமைப்படுத்தியுள்ளார். ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆளுநர் உண்மையைத்தான் பேசி வருகிறார். இந்தியாவின் பழைமையான கட்சியான திமுக ஆளுநர் குறித்து குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. ஆளுநர் கருத்துக்கு எதர்கருத்து கூறலாம் , ஆனால் அதற்காக ஆளுநரை தவறு என கூறுவதை ஏற்க முடியாது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சினிமா சூட்டிங் , ரசிகர் மன்ற வேலையை குறைத்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் போராட்டங்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.
கேரளா ஸ்டோரி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படத்தின் மையக்கதை சரியானதுதான் , அதில் சொல்லப்படும் எண்ணிக்கை 32 ஆயிரம் என்பது சரியா என எனக்கு தெரியாது. கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் அதை ரெட்ஜெயண்ட் நிறுவனம் ஏன் வாங்கியது..? என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பிடிஆர் , முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பாஜகவிற்கு வந்தால் ஏற்று கொள்வீர்களா என கேட்கிறீர்கள், பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் , ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது , நாங்கள் தாழ்ப்பாள் போடவில்லை , எப்போதும் கதவு திறந்தே இருக்கிறது எனக்கூறியுள்ளார்.