ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் அனுமதியா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு விளக்கம்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம் இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடுவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அளித்த பேட்டியில், ரஷ்யா உக்ரைன் போரின் போது உக்கரையில் சிக்கிய மாணவர்கள் மீட்கப்பட்டது போல் தற்பொழுது மியான்மரில் சிக்கி உள்ள கும்பகோணத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட தமிழர்கள் மீட்கப்படுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளை பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை, நீதிமன்றத்தை பொறுத்தவரை எந்த விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியும் இறையாண்மையை பாதிக்கும் வகையில் எந்தவித செயலும் இருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் நாங்களும் கவனத்துடன் இருப்போம் என அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment