அடடே ரிலீஸுக்கு முன்னாடி இப்படி ஒரு மிரட்டலா..?- PS1-க்கு வந்த சோதனை!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னத்திற்கு நீண்டகால கனவாக இருந்தது. அதன் ஒரு பகுதியாக மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி,பார்த்திபன், ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

cropped-ponniyin-selvan-posters-1200-tile-1660043703.jpg

இந்த சூழலில் நாளை வெளியாகும் படத்திற்கு, கனடாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு PS1 தமிழ் அல்லது KW டாக்கீஸ் திரைப்படத்தை இயக்கினால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் PS1 படத்தினை எப்படி வெளியிடுவீர்கள்? என்று பார்ப்போன் என எச்சரிக்கை விடுத்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ponniyin selvan

மேலும், ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாகவே இவ்வாறான மிரட்டலானது கோலிவுட், பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.