தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல்நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் நேற்றும் இன்றும் திரையரங்குகளின் கவுண்டர்களில் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் முதல் நாள் டிக்கெட்டை பெறுவதற்காக விஜய் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரையரங்குகளில் இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் பெறுவதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர்
ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்து கொண்டு அவர்கள் சென்றதை பார்த்து இதுதான் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் லட்சணமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் டிக்கெட் வாங்க வந்த இளைஞர்களில் பலர் மாஸ்க் அணிய வில்லை என்றும் என்பதும் தனிமனித இடைவெளி என்பது ஒரு சதவீதம் கூட கடைபிடிக்கப் படவில்லை என்பதும் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வருகிறது
இவர்களை நம்பி 100 சதவீத திரையரங்குகள் அனுமதி அளித்தால் எந்த லட்சணத்தில் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்