Connect with us

அச்சச்சோ..! 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

not

செய்திகள்

அச்சச்சோ..! 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

கருப்பு பணங்களை ஒழிக்கும் வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு 500,1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 500, 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் 2000 நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்த சூழலில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மெஷின் கேஷ் டெபாசிட் செய்தால் இயந்திரம் ஏற்றுக்கொள்வதில்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்வது வழக்கம் என்றும் இருப்பினும் கடந்த சில மாதங்களாக வங்கியின் டெபாசிட் மிஷின்கள் ஏற்றுக்கொள்வதில்லை என கூறினார்.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்கும்போது மிஷின் பழுதாகி விட்டது போன்ற காரணங்களை கூறுவதாக தெரிவித்தார். இதனிடையே மூத்த எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர் தற்போது இருக்கும் டெபாசிட் இயந்திரத்தில் 2000 ஆயிரம் நோட்டுகள் செலுத்தும் போது மடிப்பு அல்லது சேதமாகி இருந்தால் மெஷின் ஏற்றுக்கொள்ளாது என கூறினார்.

அதே போல் தனியார் வங்கி நிர்வாகி ஒருவர் கூறும்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் பெரும்பாலும் பழையவை மற்றும் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார். மேலும், நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதனால் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் இருந்து நீங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top