Connect with us

நயன்தாராவிற்கு இப்படி ஒரு முகமா? புலம்பி தள்ளும் O2 படக்குழு!

o2 disney hotstar release date tile 1652695620

பொழுதுபோக்கு

நயன்தாராவிற்கு இப்படி ஒரு முகமா? புலம்பி தள்ளும் O2 படக்குழு!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ,தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயினும் அவர் தான். 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

தனது விடா முயற்சியாலும் திறமையாலும் முன்னனி நடிகையாக வலம்வருகிறார். திரை துறையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் தனக்கு என ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். நிஜ வாழ்விலும் 2 காதலில் தோல்வியை சந்தித்த பிறகுதான் விக்னேஷ் சிவனுடன் காதல் நிஜமானது.

o2 movie review6 1655432093

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்று, இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த நிலையில் சில நாட்களின் முன் இருவருக்கும் திருமணம் நடந்து விடிந்தது,தற்போழுது இருவரும் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்.

அதன் பின் இருவரும் தனது திரையுலக வாழ்க்கைக்கு திரும்ப உள்ளனர்.மேலும் தமிழில் மட்டும் இன்றி பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார் நயன், அதுவும் முதல்படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இப்படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். நுரையீரல் குறைபாடு உள்ள குழந்தையை ஆக்சிஜன் சிலிண்டருடன் பஸ்ஸில் பயணிக்கிறார்.

எதிர்பாராத விதமாக பஸ் மண்ணுக்குள் புதைய அந்த பஸ்ஸில் போதை பொருள் கடத்தும் கும்பலும் உள்ளது. அதில் இருந்து நயன்தாரா தனது மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி கதை இருந்தாலும் சுவாரஸ்யம் சற்றுக் குறைவாகவே இருப்பது படத்தின் எதிர்மறையான விமர்சனமாக அமைந்துள்ளது.

o2

முதலில் இப்படத்தில் பஸ் மண்ணுக்குள் புதையும் போது கண்ணாடி உடைந்த மணல் பஸ்ஸின் உள்ளே வருவது போலவும் கதை இருக்க நயன்தாரா மீது மண் படுவது போன்ற காட்சி எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஆனால் நயன்தாரா என் மீது மண்ணெல்லாம் படக்கூடாது என ஒரு சில கண்டிஷன் போட்டி இருந்தாராம்.

மேலும் டீசல் டங்கு வெடித்து பஸ் முழுவதும் டீசல் ஓடும் அளவிற்கு கதைக்களம் அமைந்திருந்தது ஆனால் நயன்தாரா அதை முற்றிலுமாக மறுத்து விட்டாராம்.அதனால் இயக்குனரும் முதல் படத்தில் நயன்தாராவை வைத்து இயக்கம் வாய்ப்பை தவற விட கூடாது என்பதற்காக கதையை சற்று மாற்றி அமைத்துள்ளார்.

தற்போது நயன்தாராவால் தான் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என படக்குழு அப்செட்டில் உள்ளார்களாம்.முதலில் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என நடிக்க தொடக்கி அதன் பின் பட வாய்ப்பு குவியும் போது தனது தலைக்கனத்தை காட்டிவிடுகின்றனர்.

விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு வத்திகுச்சி பாடல் – டான்ஸ் ஆடிய மன்சூர்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top