
Tamil Nadu
அடேங்கப்பா..! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இப்படி ஒரு பின்னணியா ?
கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாடுபடுபட்டவர்.
குறிப்பாக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா தோற்கடிக்கப்பட்டார். உதயநிதியின் ஆதரவால் மாவட்ட செயலாளராக ஆன இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பவர் இரா. கிரிராஜன். முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியை சேர்ந்த இவர் திமுகவின் பல்வேறு முக்கிய வழக்குகளை நடத்தி வருகிறார்.
இதனிடையே 2014 ஆம் ஆண்டு இவருக்கு வடசென்னை ஒதுக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவினார். தற்போது மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொருளாளராக இருப்பவர் கல்யாணசுந்தரம். சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் இந்த அமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்ற நிலையில் தற்போது கல்யாணசுந்தரம் மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
