பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற உள்ளது என்பதும் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் சற்று முன் வெளியான அடுத்த புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் அவர்கள் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை 6 மணி நேர நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் கூறியுள்ளார்
நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி வரை மொத்தம் 6 மணி நேரம் நடைபெறும் என்று அவர் கூறினார். இதனால் நள்ளிரவு 12 மணிக்குத்தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஒருவேளை விளம்பரங்கள் கொஞ்சம் அதிகமாகப் போடப்பட்டால் நாளை மறுநாள் அதிகாலை தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது டிஜிட்டல் பார்வையாளர்களாக பார்க்கும் ரசிகர்களின் தகவல் மூலம் முன்கூட்டியே பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது