இந்தியாவில் பட்டினி சாவே இல்லையா? உச்சநீதிமன்றம் பகிரங்க கேள்வி

இந்தியா நெல் உற்பத்தியில் உலக சாதனை செய்து கொண்டு வருகிறது. என்ன தான் இந்தியாவில் உணவுப் பொருட்களை உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதை விட அதிகமாக பட்டினியால் தவிக்கும் மக்கள் காணப்படுகின்றனர்.

இதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து கிடந்தான். அவனது உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது ஒரு பருக்கை அரிசி கூட அவனது இரைப்பையில்  இல்லை என்று அதிர்ச்சிகரமான தகவலை மருத்துவர்கள் அளித்தனர்.

இது குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பட்டினி சாவு இல்லையா என்று கேட்டுள்ளது. இந்தியாவில் பட்டினி சாவே இல்லை என எப்படி கூற முடியும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

சமுதாய உணவகங்களை அமைத்து அமைத்து பட்டினி சாவுகளை தடுக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் கேள்வியை கேட்டார்கள். அந்தக் கேள்வியில் 5 வயது சிறுவன் விழுப்புரத்தில் பட்டினியால் இறந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியானது ஆக மத்திய அரசு பதில் கூறியது. பட்டினி சாவுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டினி சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து தர மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment