ஆதாரம் கிடைக்குமா? – அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

பாஜகவை பொறுத்த வரையில் குழப்பமான சூழல் உருவாகி வருகிறது. நேற்றைய தினத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகி அண்ணாமலைக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் குறித்து கேட்கையில் பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை என்றும் அவர் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

பிரபல ஜவுளிக்கடையில் திடீர் ரெய்டு.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

அதே போல் ரபேல் வாட்ச் குறித்து கேள்வியெழுப்பட்டது. அப்போது வாட்சை நீங்கள் 24 மணி நேரம் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனத்திடம் பல்வேறு ஆதாரங்கள் கொடுக்க இருப்பதாகவும், அதை வேண்டுமென்றால் அரை மணி நேரம் லைவ்வில் போட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை நாளை ஒத்திவைப்பு!

தற்போது கமலாலயத்திற்கு சென்று அண்ணாமலையிடம் ஆதாரங்களை கேட்டப்போது.. ஆதாரங்களை வாங்கி நிறை குறைகளை கண்டறிவதற்கு நீங்கள் யார்? என்ற கேள்வியை குறிப்பிட்டார். மேலும், நாளைய தினத்தில் ஆவது செய்தியாளர்களிடம் அண்ணாமலை ஆதாரங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.