Connect with us

உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா ?- தமிழக அரசு அதிரடி..

ஹை கோர்ட்

Tamil Nadu

உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா ?- தமிழக அரசு அதிரடி..

உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா ?- தமிழக அரசு அதிரடி..

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமான உதவித் தொகை வழங்க வேண்டும் என்று  நேத்ரோதயா என்ற அமைப்பின் சார்பாக உயர்நீதி மன்றத்தில் 2018-ந் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகையை வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆகும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பார்வையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித பாகுபாடுமின்றி நிதிஉதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து 21 வகை மாற்றுதிறனாளிகளில் 5 வகையான மாற்றுதிறனாளிகள் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டமுடியாமல் இருப்பதால் அவர்களுக்கு மாதம் ரூ2,000 ரூபாயாகவும் மற்றவர்களுக்கு மாதம் ரூ.1,000 ரூபாயும் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த உதவித்தொகை மட்டுமில்லாமல் போக்குவரத்துத்துறை, மருத்துவமனைகளில் சலுகை, ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவர் ஆஜராகி  விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கை குறித்து நீதிமன்றம் கேட்கவில்லை என்றும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அரசின் நடவடிக்கைகளை குறித்து அரிய வேண்டும் என கூறினர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜுன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top