Connect with us

பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க ஏதேனும் விதி உள்ளதா? நீதிமன்றம் பகிரங்க கேள்வி!

park

செய்திகள்

பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க ஏதேனும் விதி உள்ளதா? நீதிமன்றம் பகிரங்க கேள்வி!

பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க ஏதேனும் விதி உள்ளதா? நீதிமன்றம் பகிரங்க கேள்வி!

இன்றைய தினம் தமிழகத்தில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக உயர் நீதிமன்றத்தில் இருந்து பரபரப்பான தகவல்களை வெளிவந்துக் கொண்டு வருகிறது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்த வழக்குகளில் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அதன் வரிசையில் தற்போது தமிழகத்தின் பொழுதுபோக்கு பூங்கா பற்றியும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர். தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது குறித்து ஏதேனும் விதிகள் உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

பொழுதுபோக்கு பூங்காவை முறைப்படுத்த விதிகளை ஏன் உருவாக்க கூடாது என்று உயர் நீதிமன்ற கிளை நீதிமன்றத்திலிருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவில் பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள், மருத்துவர்கள் உள்ளனரா? என்றும் உயர் நீதிமன்ற கிளை கேள்வி கேட்டது.

மக்கள் மகிழ்ச்சிக்காக செல்லும் பொழுது போக்குப் பூங்கா பாதுகாப்பானவையாக இருப்பது மிக அவசியம் என்றும் நீதிபதிகள் கூறினர். நெல்லை மேலப்பாளையத்தில் அனுமதியின்றி நடத்தப்படும் பொழுதுபோக்கு பூங்கா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

தமிழக அரசு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top