News
ஒன்றிய அரசு என்று அழைப்பதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?-பாஜக!
தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் தமிழகத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது .மேலும் 20 ஆண்டுக்கு பின்னர் சட்டசபையில் பாஜக நிறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சில தினங்களாக சட்டப்பேரவை கூடப்பட்டது., அதில் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகிவிட்டது அதன்படி ஒன்றிய அரசு என்று தான் அழைக்கப்படும் என்று கூடப்பட்டது. இதற்கு பல விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக கூறியுள்ளது. அதன்படி ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் கூறியுள்ளார்.
மேலும் ஒன்றிய அரசு என்று அழைப்பதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? என்றும் தமிழக பாஜக கேள்வி இருக்கிறது மேலும் ஒன்றிய அரசு என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி என மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
