என்னது!! பிரதமர் விமானத்தில் நீச்சல் குளமா..?

பிரதமர் விமானத்தில் நீச்சல்குளம் இருந்ததாக தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவித்ரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர்திர் ரஞ்சன் சவித்ரியிடன் ராகுல் காந்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவித்ரி பிரதமர் வாங்கியுள்ள 2 சொகுசு விமானங்களில் நீச்சல்குளம் இருப்பதாகவும் அதில் குளிக்கும் சமயத்தில் அவர் வெளிநாடு செல்வதாக கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவித்ரிக்கு எதிராக பாஜக எம்.பி வினோத் சவுன்கார் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவந்துள்ளார். இதில் பிரதமர் மோடிக்கு எதிராக இழிவு தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் உரிமை மீறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தான் அளித்துள்ள நோட்டீசை உகாத்திரமாக கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment