உள்ளாட்சியில் தனித்துப்போட்டியா….?. புது அஸ்திரம் ஏவுகிறாரா முதல்வர்?!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி அரிது பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பின்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நடைபெற இருக்கும் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சியை கூட ஒதுக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா 2011இல் எடுத்த பிளானை இப்போது நாமும் எடுக்கலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆளும் கட்சியில் மேயர் இருந்தால் அரசின் திட்டங்களை எளிதாக செயல்படுத்த முடியும் என்பதாலும் மாநகராட்சிகளை கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஒதுக்குவதுக்கு வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

தனித்து நின்று அதிக இடங்களில் வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கலாம் என்பதால் முதல்வர் இந்த முடிவில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகிறது. மாநகராட்சிகளில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மேயர்கள் அவசியம். அவர் நம்ம கட்சியாக இருந்தால் எளிமையாக இருக்கும்.

மேலும் கூட்டணி கட்சியாக இருந்தால் ஒவ்வொரு முறையும் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க தாமதம் ஆகும்  என்பதாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவில் இருப்பதாக தெரிகிறது. ,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment