என்னப்பா படம் ரிலீஸ் ஆகலனாலும் பிரச்சனை! ரிலீஸ் ஆனாலும் பிரச்சனையா? டி.ராஜேந்தர் கம்ப்ளைன்ட்!

தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது தேதி தள்ளிப் போடப்பட்டு ரிலீசான திரைப்படம்தான் மாநாடு. ஆயினும் மாநாடு படம் வெளியான பின்னர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அதிகமாக காணப்பட்டது.மாநாடு

 

மாநாடு திரைப்படமும் தற்போது வரை திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தொலைக்காட்சிக்கு வழங்கியது எதிர்த்து அப்படத்தின் கதாநாயகனின் தந்தையான டி.ராஜேந்திரன் வழக்கு தொடுத்துள்ளார்.

அதன்படி நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய எதிர்த்து தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்தோம் என்றும் டி.ராஜேந்தர் கூறியிருந்தார். படம் வெளியாக பெருமுயற்சி எடுத்த எங்களிடம் கலந்து பேசாமலேயே சாட்டிலைட் உரிமையை விற்கப்பட்டது என்றும்  ராஜேந்தர் கூறியுள்ளார்.இதனால் திரைப்படம் வெளியான பின்பும் பிரச்சனையான சூழலே நிலவுவது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment