கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வந்ததில் இருந்து சினிமா வட்டாரம் பரபரப்பானது.இரு படங்களும் பான் இந்தியா படமாக வெளியானதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
மார்ச் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியான நிலையில், அதற்கு அடுத்த நாள் கேஜிஎஃப்-2 வெளியானது. இந்திய அளவில் கேஜிஎஃப்-2 வசூலில் உச்ச சாதனைகளைப் படைத்துள்ளது. வசூல் பட்டியலில் முன்னணியில் இருந்துவந்த பல படத்தின் சாதனைகளையும் இப்படம் தகர்த்துவருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் படம் மற்றும் கேஜிஎஃப் 2 படத்தின் போட்டியில் பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
TNPSC தேர்வு எழுதுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசு!!
முதலில் அதிக தியேட்டர்கள் விஜய்க்குத்தான் கொடுக்க ஒதுக்கப்பட்டிருந்தாலும் சில நாள்களில் அனைத்து தியேட்டர்களும் கேஜிஎஃப் 2-விடம் சென்றது. விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகரிடம் பீஸ்ட், கேஜிஎஃப் 2 படங்களைப் பார்த்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
சிறிதும் தயக்கம் படாமல் உடனே பதிலளித்தார் அவர். படம் என்னமோ நன்றாக தான் இருக்கிறது ஆனால் அதில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தது என கூறினார்.குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு ஹீரோ துப்பாக்கியுடன் செல்கிறார் அப்போதே மந்திரிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பிரதமர் முன்னிலையில் ஒரு மந்திரியை சுட்டுக் கொல்கிறான் ஹீரோ.
ஒரு நாடாளுமன்றத்திலும் நுழைய வேண்டுமென்றால் எத்தனை அடுக்கு பாதுகாப்பு தாண்டி செல்ல வேண்டும். லாஜிக் இல்லை இருந்தாலும் அதை மறக்கடித்து கைதட்ட வைத்தது கேஜிஎப் 2 திரைப்படம். இதுதான் அந்த திரைப்பட வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.