நீல ரத்தினக்கல்லின் விலை இத்தனை கோடியா? பொருளாதார விலை வீழ்ச்சியில் இலங்கைக்கு அடித்தது ஜாக்பாட்!

தற்போது உலகமே பொருளாதார வீழ்ச்சியில் பயணித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கை பெற்ற கடன் சுமையின் காரணமாக அங்கு உணவுப் பொருட்களின் விலைவாசி கடும் விலை உயர்ந்தது. இத்தகைய பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு ஜாக்பாட் அடித்தது போல நீல ரத்தினக்கல் கிடைத்துள்ளது.

அதன் படி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீல ரத்தினக்கல்லுக்கு ஆசியா ராணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நீல ரத்தினக்கல்லை விற்பனை செய்ய இலங்கை முயன்று வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனை வாங்குவதற்கு துபாய் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி துபாய் நிறுவனம் இந்த நீல ரத்தினக்கல்லை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய நீல ரத்தினக்கல் இலங்கையிலுள்ள பலாங்கொடை என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் இலங்கை யாருக்கு இந்த நீல ரத்தினக் கல்லை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உலகில் உள்ள பல நாடுகள் இந்த ரத்தினக் கல்லை கொள்முதல் செய்ய போட்டி போட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment