Connect with us

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆபத்தா?

Tamil Nadu

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆபத்தா?

6abffd08c481bcdad4ec3cd7040f3bc1

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டுமே உண்டு என்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் இந்த பதவிகளை ஏற்றுக் கொண்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் 

இந்த வழக்கு சற்றுமுன் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் நீதிபதி தெரிவித்தபோது அதிமுக உட்கட்சி,  அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் கட்சி அளிக்கும் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஒன்று என்றும் அதை தவறு என்று சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது 

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இதனை அடுத்து அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top