பொங்கல் பரிசு தொகுப்பு சரியாக தருகிறார்களா? நேரில் சென்று ஆய்வு செய்யும் முதல்வர்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தைத்திங்கள் ஒன்றாம் தேதி தமிழக மக்கள் மத்தியில் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு

இந்த நிலையில் இந்தாண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் பல குறைபாடுகள் உள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் நேற்றையதினம் நடைபெற்ற சட்டமன்ற பேரவையிலும் இது குறித்து விவாதம் நிகழ்ந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அண்ணா சத்யாநகர் ரேஷன் கடையில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இணைந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை தீவுத் திடல் அருகே ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு சரியாக வழங்கப்படுகிறதா? எனவும் முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அங்குள்ள ரேஷன் கடை ஊழியரிடம் பல்வேறு கேள்விகளையும் முதலமைச்சர்  ஸ்டாலின் கேட்டுக்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக சுமார் 800 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கட்டை பைக்களைக் கொண்டு வரவேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறுவதாகவும் புகார் வந்தது. ஆனால் ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடை பொருள்களில் குறைகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதனால் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலே ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment