Connect with us

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறாரா பழ.கருப்பையா?

Tamil Nadu

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறாரா பழ.கருப்பையா?

18e75f5539ed8f5eb87380b0bde1f042-1

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பழ கருப்பையா விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அவரது கட்சியின் ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதுவரை கமல்ஹாசனின் கட்சி வெற்றியை ருசிக்கவில்லை என்றாலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு சிலர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன் உள்பட ஒரு சிலர் விலகி திமுகவில் இணைந்தார்கள் என்பதும் இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கும் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவ்வாறு தான் விலகியதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி உண்மையானது அல்ல என்றும் முற்றிலும் வதந்தி என்றும் அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top