கடன் தொல்லை அதிகம் உள்ளதா

b33f8c742e7c843a769e0ad0b06057df-1

உங்களுக்கு நிறைய கடன் அல்லது பிரச்னைகள் இருக்கின்றனவா?

அதில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ விருப்பமா?

சொந்த வீடு அல்லது அரசு துறையில் வேலை அல்லது மிக அதிகமான சம்பளம் தேவை என்று அடிக்கடி நினைக்கிறீர்களா?

இந்த பிறவியிலேயே சித்தர் இருவரது நேரடி உபதேசம் மற்றும் வழிகாட்டுதல் தேவை என்று அடிக்கடி எண்ணம் வருகிறதா?

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் !!!

இன்று முதல் தினமும் ஒரு மணி நேரத்திற்கு நற்பவி என்ற மந்திரத்தை எழுதி வாருங்கள்.

குறைந்தது ஒரு ஆண்டு வரை தினமும் எழுதி வாருங்கள்.அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை எழுதி வாருங்கள்.

இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் துக்க வீட்டிற்கு சென்றாலும்

குழந்தை பிறந்த வீட்டிற்கு சென்றாலும்

எந்த தீட்டும் கிடையாது.அந்த நாட்களிலும் எழுதலாம் .

பெண்கள் மாத விலக்கு நாட்களில் மட்டும் எழுத வேண்டாம்.

அசைவம் ,மது தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.இந்த இரண்டையும் தவிர்த்தால் வெகு விரைவாக உங்கள் நோக்கம் நிறைவேறும்.

தினசரி எழுதும் போது டிவி அல்லது போன் பார்க்க கூடாது.எழுதும் போது பாதியில் நிறுத்திவிட்டு வேறு வேலைகளுக்கு செல்ல கூடாது.போனில் பேச கூடாது.

தினசரி எழுத முடியாமல் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஜெபம் செய்து வாருங்கள்.

அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து இருக்கும் இடத்தில் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஜெபம் செய்து வந்தால் ஒரு ஆண்டு காலம் சென்ற பிறகு மிகவும் அதிசய தக்க தெய்வீக அனுபவங்கள் கிடைக்கும்.

ஜெபம் செய்யும் போது தரையில் அமர்ந்து ஜெபம் செய்ய கூடாது.ஒரு. புதிய விரிப்பு விரித்து ஜெபம் செய்து வர வேண்டும். அந்த விரிப்பை வேறு எந்த ஒரு காரியத்திற்கும் பயன் படுத்த கூடாது.விரிப்பில் அமரும் போது உங்கள் உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் உட்கார வேண்டும்.

ஜெபம் செய்யும் போது வாய்க்குள் ஒரு கிராம்பு வைத்து ஜெபம் செய்யலாம்.ஆனால்,கட்டாயம் கிடையாது.ஜெபித்து முடித்த பிறகு அந்த கிராம்பை துப்பி விட வேண்டும்.

ஜெபம் செய்து முடித்த உடனே சிறிது இளநீர் அல்லது தண்ணீர் அருந்த வேண்டும்.

தர்ப்பை பாய் எனில் இன்னும் சிறப்பு.

கோசாலை இருக்கும் இடத்தில் ஜெபம் செய்து வந்தாலும்

உயரமான. மலை கோவில் பகுதியில் ஜெபம் செய்து வந்தாலும்

உயரமான கட்டிடம் உள்ள பகுதியில் மேல் மாடியில் ஜெபம் செய்து வந்தாலும் இதை விட அரிய தெய்வீக அனுபவம் கிடைக்கும்.

எந்த ஒரு தெய்வீக அனுபவத்தையும் ஒரு போதும் எவரிடமும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது.

எந்த ஒரு மணி நேரம் என்பது உங்கள் விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளலாம்.

நற்பவி என்று ஒரு முறை சொன்னால் அல்லது எழுதினால் 4 கோடி முறை ஓம் நமசிவாய என்று ஜெபம் செய்தமைக்கு சமம் என்று காகபுஜன்டர் சித்தர் உபதேசம் செய்து உள்ளார்.

ஜோதிடர்: கை வீரமுனி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.