புஷ்பா படத்தின் வசூல் விவரம் பொய்யா? நடிகர் சித்தார்த்தின் டிவிட்டால் சர்ச்சை…!

தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் படங்களில் எந்த அளவிற்கு ஆக்டிவாக நடித்து வருகிறாரோ அதே அளவிற்கு டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சித்தார்த்தின் டிவிட்

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையான அரசியல் கருத்துகளை பதிவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வார். அடிக்கடி மத்திய அரசை விமர்சித்து தான் இவரின் டிவிட்டர் பதிவு இருக்கும். இதனால் சித்தார்த்தை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவருக்கு ரசிகர்களைவிட விமர்சகர்கள் தான் அதிகம்.

அந்த வகையில் தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து டிவீட் செய்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுகுறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது, “ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் குறித்து பொய்யான தகவல் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் வாங்குகிறீர்கள்? பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர்கள் காலம் காலமாக பொய் கூறி வருகிறார்கள்.

ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலரும் போலியாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும், அனைத்து தொழில்களிலும் இதே நிலை தொடர்கிறது. பான் இந்தியா நேர்மையற்றது” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் ஒரே வாரத்தில் 229 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் பான் இந்தியா நேர்மையற்றது என டிவிட் செய்திருப்பதால் புஷ்பா படத்தை தான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment