கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் நாள்தோறும் சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. பல சாலை விபத்துகளில் கால்நடைகளும் முக்கிய காரணமாக அமைகிறது. ஏனென்றால் கால்நடைகள், நாய்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த நிலையில் திருச்சியில் கால்நடைகளை சாலைகளில் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியை கேட்டுள்ளார்கள்.

அதன்படி சென்னை மாநகரில் கால்நடைகள் சுற்றி வருவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். விதிகள் இல்லையென்றால் கால்நடைகள் சுற்றித்திரிய தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையா? இன்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் கால்நடைகளுக்கு தடை விதிக்கும் விதிகள் ஏதும் இல்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment