தளபதி 67-ல் யுவன் சங்கர் ராஜா உள்ளாரா? ரமேஷ் பாலாவின் ட்விட்டர் பக்கத்தால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இளையராஜாவிற்கு அடுத்து இளைஞர்களின் மத்தியில் அடிக்டட் கிங்காக வலம் வருகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவருடைய குரலுக்காகவே பலரும் மெய்மறந்து பாடலை கேட்ப்பர். அந்த அளவிற்கு அவரது பாடல்கள் அனைத்தும் சோகத்திற்கு மருந்தாக அமையும்.

இந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் உடன் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 67வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதனை ரமேஷ் பாலா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு தளபதி விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். இது மட்டும் அதிகாரப்பூர்வமாக இணைந்தால் தளபதி 67 படத்தில் ரசிகர்களுக்கு கிறகடிக்கும் பாடல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment