சுனைனா கமிட் ஆகிட்டாங்களா…? அவரின் இன்ஸ்டா புகைப்படத்தால் குழப்பத்தில் நெட்டிசன்கள்…

தென்னிந்திய நடிகையான சுனைனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். மஹாராஷ்த்திரா மாநிலம் நாக்பூரில் பிறந்து வளர்ந்தவர் சுனைனா. ஆரம்பத்தில் மாடெல்லிங் செய்து வந்தார் சுனைனா.

மாடெல்லிங் செய்து வந்ததன் வாயிலாக திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார் சுனைனா. 2006 ஆம் ஆண்டு தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானவர் நகுல் ஆவார். இவர் பாய்ஸ் படத்தில் நடித்தவரும், நடிகை தேவயானியின் சகோதரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக படமான ‘காதலில் விழுந்தேன்’ படத்தினால் சுனைனா மற்றும் நகுல் இருவரும் பிரபலமாயினர். இப்படத்தின் பாடல்களும் கூட ஹிட்டானது. குறிப்பாக ‘நாக்க முக்க’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. நகுல் மற்றும் சுனைனாவின் கெமிஸ்ட்ரி படத்தில் அபாரமாக இருந்தது.

தொடர்ந்து ‘வம்சம்’, ‘திருத்தணி’, ‘மாசிலாமணி’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’, ‘தெனலிராமன்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். ‘நீர்ப்பறவை’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். மாடர்ன் உடை என்றாலும், புடவை ஆனாலும் இரண்டும் சுனைனாவிற்கு கச்சிதமாக பொருந்தும். குடும்ப பாங்கான முகத்திற்காகவும் இயல்பான நடிப்பிற்காகவும் ரசிகர்களை கொண்டவர் சுனைனா.

தற்போது, இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுனைனா, போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் சுனைனாவின் கை மற்றும் ஒரு ஆண் அவரது கையை பிடித்திருப்பது போல் போட்டோவை போஸ்ட் செய்திருந்தார். போஸ்ட்க்கு கீழ பூட்டு படத்தை போட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சுனைனா கமிட் ஆகி விட்டார்களா, விரைவில் திருமணமா என்ற குழப்பத்தில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...