வெயில் கால மனஅழுத்தம் உண்மையா ..?
பருவ மாற்றத்தினால் ஏற்படும் மனநல பாதிப்பு சீசன் எவ்வட்டிவ் ஸ்டிரஸ் ஆர்டர் பருவகால பாதிப்பு கோளாறு ஆகும். மேற்கத்திய நாடுகளில் குளிர் காலங்களில் அதிக மன அழுத்தமும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வெயில் காலங்களில் ஏற்படும் மன அழுத்தம் பரவலாக காணப்படுகிறது.
சோகம், எரிச்சல் வழக்கமான செயல்பாடுகளில் கவனமின்மை, தூக்கமின்மை , அதிக உணவுகளை உட்கொள்ளுதல், உடல் எடை கூடுதல் ஆகியவை வெயில் காலத்தின் மன அழுத்தற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இருப்பினும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஒரே கட்டத்தில் வரும் மன அழுத்தம் காலநிலை சார்ந்ததாக இருக்க முடியும். நம்மை சுற்றியுள்ள வெப்பம், ஈரப்பதம் நம் மனநிலையை வெகுவாக பாதிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சரிவிகித உணவு, முறையான உடற்பயிற்சி, பிடித்த வேலைகளை செய்தல், இரவில் நன்றாக தூங்குங்கள் வேண்டும்.
குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடித்தால் வெயில் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்பது மருத்துவர்களின் கணிப்பாக உள்ளது.
